News Just In

2/23/2020 06:42:00 PM

மட்டக்களப்பில் வைத்தியசாலையின் கவனயீனம்; தாயும் சிசுவும் உயிரிழப்பு- எச்சரிக்கை விடுக்கும் வைத்தியசாலை நிருவாகம்!!


மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்திற்கு உட்பட்ட மகிழடித்தீவு வைத்தியசாலை அதிகாரிகளினதும், தாதியர்களினதும் அசமந்த போக்கினால் இளம் தாயும் சிசுவுமாக இரு உயிர்கள் பறிக்கப்பட்டது என இன்று பல சமூக வலைத்தளங்ககளில் செய்தி வெளியாகிய நிலையில் அது உண்மைக்கு புறம்பான செய்தி என்று மகிழடித்தீவு வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசத்தில் அநேகமான ஏழை மக்களின் வைத்திய தேவைகளை பூர்த்தி செய்யும் வைத்தியசாலையாக மகிழடித்தீவு பட்டிப்பளை வைத்தியசாலை காணப்படுகின்றது. தற்போதைய காலகட்டத்தில் சிறந்த ஒரு வைத்தியசாலையாக வளர்ச்சியடைந்து வரும் இதனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

உண்மைக்கு புறம்பான இச் செய்தியினை வைத்திய சாலை நிருவாகத்தினர் கண்டிப்பதுடன், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்த சம்பவம் ஒன்றை (தாயும் சிசுவும் உயிரிழப்பு) உண்மைக்கு புறம்பாக அண்மைக்காலத்தில் நடந்ததாக  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையே இந்த செய்தி வெளியானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments: