ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பிரதம அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவேக வீதியாகும்.
மாத்தறை – ஹம்பாந்தோட்டைக்கு இடையிலாக அமைக்கப்படும் இந்த வீதிக்காக 16 ஆயிரத்து 870 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரையான பேருந்து கண்டனம் 880 ரூபாய் ஆகும்.
தங்காலையில் இருந்து கொழும்பு வரையான பேருந்து கட்டணம் 680 ரூபாய் ஆகும். ஹம்பாந்தோட்டையில் இருந்து மாகும்புர வரையான பேருந்து கட்டணம் 810 ரூபாய் ஆகும்.
அதேபோல், தங்காலையில் இருந்து அதிவேக வீதியின் ஊடாக மாகும்புர வரையான பேருந்து கட்டணம் 610 ரூபாய் ஆகும்.
No comments: