News Just In

2/23/2020 05:07:00 PM

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி மோதி பெண் உயிரிழப்பு!!


(காத்தான்குடி நிருபர்)
மட்டக்களப்பு காத்தான்குடி-03, கடற்கரை வீதி, சிறுவர் பூங்கா முன்பாக வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்று (22) இரவு இடம்பெற்ற இவ்விபத்து சம்பவத்தில் ஓட்டமாவடி 3ம் வட்டாரம் அஸ்கா பேக்கரி வீதியைச் சேர்ந்த பாத்தும்மா (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது குடும்பத்துடன் காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த வாழைச்சேனை - மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ் இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: