உலக தாய்மொழிகள் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் 'கவியாற்றுகையில் மொழி' என்னும் எண்ணக்கருவில் பாடத்திட்டதையும் அதனுடனான ஆய்வையும் மையப்படுத்திய நிகழ்வு 21.02.2020 அன்று காலை 9.00 மணிக்கு நுண்கலைத்துறையின் தலைவர் திரு.சு.சந்திரகுமார் அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக கலைகலாசாரபீட பீடாதிபதி திரு.ஜீ.கென்னடி அவர்களும், ஆற்றுகையாளராக சின்னத்தம்பி பொன்னுத்துரை அவர்களும்; கலந்துகொண்டனர்.
நுண்கலைத்துறையின் இச்செயற்பாட்டில் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், விரிவுரையாளர் திரு.து.கௌரீஸ்வரன், உதவி விரிவுரையாளர்களான திருமதி பிரசாந்தி இளங்கோ, திருமதி துஷ்யந்தி சத்தியஜித், கு.கனிஸ்ரா, ஞா.கபிலாஷினி ஆகியோரும், மாணவர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி ஒழுங்குபடுத்தி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கவிபாடுதல் என்பது எழுந்தமானத்தில் எளிமையாக ஆழ்ந்த அர்த்தமும் அங்கதமும் வெளிப்பட அமையும் பொதுசனக் கலையாகும். பொதுமக்கள் கலையான இக்கவிபாடுதல் மரபு வித்துவத்தில் வித்தியாசங்களையும் கருத்துநிலையில் வேறுபாடுகளையும் கொண்டு காணப்படுகின்றது.
இந்நிகழ்வானது கவியினைத் தம் படைப்பாக்க உணர்வுடன் தமக்குரிய பண்பாட்டு வெளியில் பிரயோகிக்கும் தன்மையினைப் பிரதானப்படுத்தி அதில் செயற்படுவோரை மையப்படுத்தி நடாத்தப்பட்டது. இருந்து கற்று மனனஞ் செய்து ஒப்புவிப்பதில் இருந்து விடுவித்துக் கொண்டு படைப்பாற்றலுடனும் விமர்சன நோக்குடனும் புத்தாக்கம் செய்வதற்கான சூழலினை ஏற்ப்படுத்தும் நோக்கில் மொழிதின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதுமட்டுமன்றி இந்நிகழ்விலே தாய்மொழியானது ஒரு சமூகத்தின் பண்பாட்டு வாழ்வியலின் வெளிப்பாட்டின் உயிராகும். அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கின்ற மொழியடையாளம் என்பதை தாண்டி அம்மொழிகளை கேலிகிண்டலுக்குட்படுத்தி அம்மொழி மரபினை அச்சமூகத்தினரிடையே இருந்து மறக்கடித்துச் செல்லப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நின்று நீங்கி நமது தாய்மொழி அதன் பிரயோகத் தன்மையிலும் கவனஞ் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

No comments: