News Just In

2/23/2020 08:30:00 AM

உணவகங்களில் சோதனை! பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கை!!

-நூருல் ஹுதா உமர்-
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிந்தவூர் பிரதேச உணவங்களில்நேற்று மாலை (22) திடீரென சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நிந்தவூர் சுகாதார காரியாலயத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீரின் தலைமையில் இயங்கும் நிந்தவூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நடவடிக்கைகளின் போது எவ்வாறு உணவுப் பொருட்களை கையாள வேண்டும் என்பதையும் உணவகங்களின் சுகாதார நிலைகளின் மேம்பாடு பற்றியும் உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு தெளிவாக விளக்கினர்.

உணவகங்களின் சுகாதார நிலைகளை சரியாக பின்பற்ற மறுக்கின்ற அல்லது பொடுபோக்காக இருக்கின்ற உணவக உரிமையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

No comments: