
பல்நோக்கு அபிவிருத்திச் செயலணியின் ஊடாக வருமானம் குறைந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சை இன்று புதன்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயங்களில் 26.02.2020 இன்று புதன்கிழமை தொடக்கம் 29.02.2020 சனிக்கிழமை வரை நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.
குறித்த நேர்முகப் பரீட்சையில் பிரதேச செயலக உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
ஆரையம்பதி-மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய சிலரைப் படங்களில் காணலாம்.














No comments: