News Just In

2/26/2020 05:45:00 PM

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பு!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கிழக்கு மாகாண ஆளுநரின் மாதாந்த பொதுமக்கள் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது பணியாட்கள் தொகுதியினருடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மக்கள் பணிக் காரியாலயத்தில் பொதுமக்களை சந்தித்தார்.

பொதுமக்களின் காலடிக்கு வந்து குறைபாடுகளை ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் மாதாந்தம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இம்மாதிரியான மக்கள் சந்திப்பு மாதாந்தம் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது. மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தமது குறைகளையும், பிரச்சினைகளையும் ஆளுநர் முன்னிலையில் சமர்ப்பித்தனர்.



No comments: