News Just In

2/26/2020 07:00:00 PM

தாழங்குடா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தாழங்குடாவில் இயங்கிவரும் விளையாட்டு கழகங்களிற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் உரையாற்றும் போது "விளையாட்டு கழகங்கள் தங்கள் கிராமங்களில் நல்ல காரியங்களை செயற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த முன்னோடிகளாகவும், கிராமங்களில் ஒற்றுமையாகவும் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், கிராம பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments: