-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் 24ம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறும் என்று முன்னதாக மாவட்ட செயலகம் அறிவித்திருந்தபோதும் நிகழ்வு மறு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி 24ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டம் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் ஏற்கெனவே அறிவித்த நிகழ்ச்சி நிரலின்படி கூட்டம் இடம்பெறும் என்று மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படுவதோடு கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களும் அவை தொடர்பிலான அம்சங்களும் ஆராயப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடப்பாண்டிற்கான புதிய திட்ட முன்மொழிவுகளும் இவ்வாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்களும் ஆராயப்பட்டு அது உரிய முறையில் செயல்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடுவதற்கான விடயங்களும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டத்திற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக தவிசாளர்கள், முப்படை, பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டு மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2/19/2020 01:25:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மாவட்ட செயலகம்
/
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது!!
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: