நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் கிரிக்கட் போட்டிகளுக்காக முன்னெடுக்கப்படும் வாகன பேரணியின் போது பாடசாலைகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டிகளை நடாத்தும் பாடசாலைகளின் அதிபர்கள், மாணவத்தலைவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நேற்று இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: