அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக கடந்த இரண்டு மாதங்களில் 400க்கு மேற்பட்ட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 183 வர்த்தக நிலையங்கள் பாவனையாளர் சட்டத்தை மீறியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி என்.எம்.சப்ராஷ் தெரிவித்தார்.
இவ்வாறு சட்டத்தினை மீறிய 183 வர்த்த நிலையங்களுக்கும் எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு 7 லட்சத்து 25ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
இவர்கள் காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிக்கு வைக்காமை, மின்சார உபகரணங்களுக்கு கட்டுறுத்துக் காலம் வழங்காமை, எஸ்.எல்.எஸ்.தரச்சான்றற்ற பொருள்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலையில் பொருள்களை வற்றமை, அனுமதி பெறப்படாத முகப்பூச்சுக் கிறீம்களை விற்பனை செயத குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த 24ம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானிக்கமைய பெரிய வெங்காயத்தின் நிர்ணய விலையான 190 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்த 12 வியாபாரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதானவும் அவர் தெரவித்தார்.
இவ் விசேட சுற்றி வளைப்புகள், இம்மாதம் 25, 26ம் திகதிகளில் அக்கரைப்பற்று, சாயந்தமருது, கல்முனை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நிர்ணய விலைக்கு அதிகமான பெரிய வெங்காய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கெதிராக எதிர்காலத்திலும் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், அதிக பட்ச தண்டப் பணம் அறவிடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: