News Just In

2/29/2020 06:15:00 PM

320 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது!!

இன்று (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே டிப்பர் வாகனமொன்றிலிருந்து 320 கிலோ நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா- மரதன்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் மற்றும் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளும் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஜெயபுரம் பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

No comments: