News Just In

2/18/2020 01:09:00 PM

மட்டக்களப்பு சின்ன ஊறணியில் இடம்பெற்ற 'சாதனையாளர்கள் கௌரவிப்பும் பாராட்டும்'


மட்டக்களப்பு சின்ன ஊறணி கிராமத்தில் இயங்கி வரும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான மாவடிப்பிள்ளையார் கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி ஒன்றியத்தினரின் (MECDA) கௌரவிப்பு மற்றும் பாராட்டு பரிசளிப்பு விழா அண்மையில் மட்டக்களப்பு சின்ன ஊறணி சரஸ்வதி வித்தியாலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது கடந்த திருவெண்பாவை காலத்தில் மேற்படி ஒன்றியத்தினரால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பண்ணிசை, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், பூமாலை கட்டுதல் மற்றும் கோலப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசல்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கடந்த 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களும்,மேற்படி கிராமத்திலிருந்து பாடசாலை ரீதியில் சூழலியல் சார் ஜனாதிபதி விருது பெற்ற மாணவியும், அத்தோடு தனது உழைப்பிலிருந்து ஒரு பகுதியை தன்னார்வத் தொண்டுக்காக அர்ப்பணித்து சமூக உதவி புரிந்து வரும் தொண்டாளர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

MECDA அமைப்பினரின் அயராத முயற்சியில் கொடையளர்களின் நன்கொடையின் மூலமாக விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்சிக்கு ஸ்ரீமாவடிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவானந்தக்குருக்கள் ஆசி வழங்க பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் திரு தி. சரவணபவன் அவர்களும்,

கௌரவ விருந்தினராக கந்தசாமி சத்தியசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பாடசாலை அதிபர் திரு அ.யோகானந்தராஜா அவர்களும் திரு ம.சுந்தரலிங்கம் ஆசிரியர் அவர்களும் ஸ்ரீமாவடிப்பிள்ளையார் , சிவன் ஆலய பரிபாலன சபையினரும் ஆசிரியர்களும் , மாணவர்களும், பொது மக்களும் கலந்து சிறப்புத்தனர்.
















No comments: