News Just In

2/29/2020 02:15:00 PM

மண்முனை மேற்கு பிரதேசத்தில் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சையின் நான்காவது நாள் இன்று!

(எஸ்.சதீஸ்)
நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கியத்தின் நோக்கு எனும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பயிலுனர் பதவிகளுக்கான நேர்முகப் பரீட்சையின் இறுதிநாளாகிய இன்று 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கான நேர'முகப் பரீட்சை நடைபெற்றது.

பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் 1ம் கட்ட பயிலுனர் பதவிகளுக்கான ஒரு இலட்சம்பேர் ஆட்சேர்ப்பு திட்டம் நாடு பூராவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் கடந்த புதன்கிழமை 26ம் திகதி ஆரம்பமான இன் நேர்முகப் பரீட்சை நான்காவது நாளாக இன்று நடைபெற்றது.

மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள 24 கிராமப் பிரிவுகளிலிருந்தும் 1643 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதில் வருகைதந்தோருக்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்றது.

மகிழவட்டவான்,ஆயித்தியமலை - வ்டக்கு, ஆயித்தியமலை - தெற்கு, உன்னிச்சை, நெடியமடு, விளாவட்டவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோருக்கும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றத் தவறியவர்களுக்கும் இறுதிநாளாகிய இன்று நேர்முகப்பரீட்சை நடைபெற்றது.


இதன்போது மண்முனை மேற்கு பிரசே செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிதேச செயலக நிருவாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரால் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டது.

No comments: