News Just In

2/19/2020 02:49:00 PM

கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் "கலையாழி" கலை இலக்கியத் திருவிழா


கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் நடாத்தும், "கலையாழி" கலை இலக்கியத் திருவிழா இன்றும் (19.02.2020) நாளையும் (20.02.2020) கல்லடி  சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறுகின்றது.

இன்று ஆரம்பமான இந் நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் திருமதி அம்மன்கிளி முருகதாஸ், கிழக்கு பல்கலை நுண்கலைத் துறைத் தலைவர் சந்திரகுமார், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் மற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

19,20 ஆகிய இரு தினங்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 09 மணிவரை இடம்பெறும் நிகழ்வில் புகைப்படம், புத்தகம், இசை, நடனம், ஓவியம் ஆகிய கண்காட்சிகள், அரங்க ஆற்றுகைக் கலையம்சங்கள், போன்ற பல துறை சார்ந்த திறன் வெளிப்பாடுகள் மாணவர்களால் பார்வையாளர்களை தமிழர் கலாசாரத்தினுள் மீண்டும் அழைத்து வரும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




































No comments: