ஆயுதம் மற்றும் கைவிலங்கு என்பவற்றுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர், தம்மை சீஐடி (CID) என தெரிவித்து வீடொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொள்ளைச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டுகொட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலுள்ளவர்களை பயமுறுத்தி ரூபா 29 இலட்சத்து 25 ஆயிரம் பணம் மற்றும் ரூபா 25 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான 42 பவுண் தங்க நகைகளை குறித்த குழுவினர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் வேன் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: