கல்முனை உள்ளூராட்சி நிருவாகம் 250 வருட வரலாற்றுப்பதிவுகள் எனும்
2019.04.15ம் திகதி வரையான 250 வருடகால ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் முக்கியமான ஆவணம் ஒன்று இன்று மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எனும் வரலாற்று ஆய்வாளரின் மூன்றாவது நூலாக வெளிவந்திருக்கும் இந்நூலில் 6 பெரும் தலைப்புக்களில் 272 பக்கங்களில் நீண்ட கால தேடலின் பெறுபேறு, பாரம்பரியமான ஒரு பிரதேசத்தின் உள்ளூராட்சி சரித்திரமான
01. இலங்கை உள்ளூராட்சி முறை, கல்முனை மாநகரம் பற்றிய அறிமுகம்.
02. கரவாகுப்பற்று, சுகாதார சபை, உள்ளூர் சபை, பட்டின சபை ஆகிய பண்டைய உள்ளூராட்சி முறைகள்.
03. கரவாகு வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு கிராம சபைகள்.
04. மாவட்ட அபிவிருத்தி மற்றும் கிராமேதைய சபைகள்.
05. ஒன்றிணைந்த கல்முனை பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை நிருவாகங்கள்.
06. புதிய கலப்பு உள்ளூராட்சி தேர்தல் என்பனவற்றை ஆராய்ந்ததுடன் பிரதேசத்தின் உள்ளூராட்சி வரலாறு, அதில் மக்கள் பங்குபற்றல்கள், அரிய புகைப்படங்கள், சான்றாதாரங்கள், புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஒருங்கே கோர்வை செய்யப்பட்ட முழுமையான நூலாக வெளிவந்துள்ளது.
மரபுரிமை ஆய்வு வட்ட ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சிரேஸ்ட இராஜதந்திரி ஏ.எல். ஏ. அசீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் அமைச்சின் மேலதிக முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மூத்த இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், சமூக நல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: