பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 03 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை (22) மன்னார், பேசாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேசாலை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துள்ளுக்குடியிறுப்பு வசந்தபுரம் பகுதியில் 205 கிலோ 44 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ள பொலிஸார் மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: