News Just In

2/22/2020 09:37:00 PM

மட்டக்களப்பில் சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் 163வது ஜனன தின நிகழ்வு


(எஸ். சதீஸ்)
உலக சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவலின் 163வது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

நீருற்றுப் பூங்காவில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இறை வணக்கம் இடம் பெற்றதுடன் தேசிய கொடி மற்றும் சாரணர் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்ட்டது.

அதனையடுத்து சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவலின் உருவச்சிலைக்கு மாலை அணிவத்து சாரணர் தொடர்பான கருத்துரைகளும் , நற்சிந்தனைகளும் இங்கு வருகை தந்த பிரமுகர்களால் தெரிவிக்கப்பட்டது,

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ். நவநீதன், மாவட்ட சாரணர் ஆணையார் பிரதீபன் மற்றும் புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ் மத்திய கல்லூரி, வின்சன்ற் மகளிர் தேசியப் பாடசாலை, புனித சிசிலியா தேசியப் பாடசாலை, சாரணர் குழு, சிவானந்தா தேசியப்பாடசாலை ஆகியவற்றின் குருளைச்சாரணர்கள். இளைஞர்கள் சாரணர்கள், பெண் சாரணர்கள், திரி சாரணர்கள் உட்பட சாரண ஆசிரியர்கள் அடங்கலாக சுமார் 200 சாரணர்கள் இதில் கலந்து கொண்டனர்.

















No comments: