சம்பந்தனுக்கு தேவையான பாதுகாப்பு, சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை) உரையாற்றிய போதே சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘சம்பந்தனின் கருத்துக்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நான் கூறவேண்டும்.
சம்பந்தனுக்கு கொடுத்த வசதிகள் எதனையும் மீண்டும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம் எடுக்கவில்லை. அதேபோல் அவருக்கான பாதுகாப்புகளையும் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதேபோல் வடக்கு கிழக்கின் சகல அரசியல் பிரமுகர்களுக்கும் முறையான பாதுகாப்புகளை வழங்கப்படும் எனவும் அரசியல் நிலைப்பாடுகளில் இவை எவையும் மாறாது எனவும் கூற வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments: