2020ஆம் ஆண்டுக்கான கரையோர கரப்பந்தாட்ட சர்வதேச போட்டியில் கலந்துகொள்ளும் பெண்கள் மற்றும் ஆண்கள் கரையோர கரப்பந்தாட்ட விளையாட்டு கழகங்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05, 06ஆம் திகதிகளில் காலை 8.00 மணி தொடக்கம் இந்த நேர்முகத்தேர்வு சுகததாச விளையாட்டு அரங்கில் உள்ள கரையோர கரப்பந்தாட்ட விளையாட்டு திடலில் நடைபெறவிருப்பதாக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதில் நாட்டில் எந்த பிரதேசத்தையும் சேர்ந்த கரையோக கரப்பந்தாட்ட வீரர்கள் கலந்துகொள்ள முடியும். பெப்ரவரி 5 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு ஆண்களுக்கான பகிரங்க தேர்வு நடைபெறவுள்ளது.
25 வயதுக்கு உட்பட்ட மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பிரிவுகளில் ஆண்கள் இதில் கலந்துகொள்ள முடியும். பெண்கள் பிரிவிலும் இதே வயதைக்கொண்ட இரு பிரிவினரும் கலந்துகொள்ள முடியும்.
1/23/2020 08:44:00 AM
Home
/
விளையாட்டு
/
கரையோர கரப்பந்தாட்ட சர்வதேச போட்டிக்கான விளையாட்டு கழகங்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை
கரையோர கரப்பந்தாட்ட சர்வதேச போட்டிக்கான விளையாட்டு கழகங்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை
Subscribe to:
Post Comments (Atom)

No comments: