News Just In

1/23/2020 02:21:00 PM

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் ,தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

இறுதி யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப் படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்குப் பின்புறமாக இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மிக நீண்ட நேரமாக அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை .

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: