திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான பொருட்களை திருடிய நபர் ஒருவருக்கு ஆறு மாதம் கட்டாய கடூழிய சிறைதண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிபதி விசானி தேனவது இன்று(21) உத்திரவிட்டார்.
வான் எல, ஜயந்திபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவருக்கே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கந்தளாயில் வீடொன்றினுள் புகுந்து வீட்டின் பெறுமதியான இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியதாக பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரை குறித்த வழக்கில் குற்றவாளியாக இனங்கண்டு இன்றைய தினம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
குறித்த நபருக்கெதிராக திருட்டுகளில் ஈடுபட்ட நான்கு வழக்குகள் கந்தளாய் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments: