News Just In

1/21/2020 02:04:00 PM

அம்பாறையில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை


அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகர்ப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாகச் செல்வது ,தொடர்பில் கண்காணிக்கப் பட்டுத் தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன்போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை சம்மாந்துறை சவளைக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.



No comments: