News Just In

1/23/2020 08:02:00 AM

மட்டக்களப்பு-குருக்கள்மடம் பிரதான வீதியில் அதிகாலை பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்து!


மட்டக்களப்பு-குருக்கள்மடம் பிரதான வீதியில் இன்று அதிகாலை அரச பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து.

வவுனியாவில் இருந்து திருக்கோயில் நோக்கி பயணிகளுடன் பயணித்த பேருந்து அதிகாலை 4 மணி வேளையில் மட்டக்களப்பு-கல்முனை (குருக்கள்மடம்) பிரதான வீதியின் ஐயனார் ஆலயத்திற்கு முன்னால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்தவர்கள் எவருக்கும் பெரும் பாதிப்பு இல்லாத நிலையில், பேருந்தின் முன் பகுதி சேதமடைந்துள்ளதுடன், மின்கம்பம் உடைந்து பேருந்தின் கூரையின் மேல் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


No comments: