நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச கலை இலக்கிய விழா மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான ‘சுவதம்’ கலைஞர் கௌரவிப்பு நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தினால் சிறப்பாக நடத்தப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி. அருணன் தலைமையில், உதவிப் பிரதேச செயலாளர் பி. பிரணவரூபனின் வழிகாட்டுதலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
காரைதீவு கமு/கமு/ விபுலானந்தா மத்திய கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிர்வாக உத்தியோகத்தர் டி. கமலநாதன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம். றின்சான் ஆகியோர் பங்கேற்றதுடன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே. சுதர்சன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.
இதன்போது பேச்சு, கதாப்பிரசங்கம், கும்மி, கோலாட்டம், பொல்லடி உள்ளிட்ட பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மேலும், பிரதேச கலை இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த பிரிவுப் போட்டியாளர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, காரைதீவு பிரதேசத்தின் கலை, கலாசார வளர்ச்சிக்கும் கலைத்துறைக்கும் பங்களிப்பு வழங்கிய நான்கு கலைஞர்களுக்கு ‘சுவதம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் எஸ். சுரேஸ்குமார், இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எல். சிவலோகினி உள்ளிட்ட கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதேசத்தின் பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாத்து, இளம் தலைமுறையினரிடையே கலை, இலக்கிய ஆர்வத்தை வளர்ப்பதுடன், கலைஞர்களின் ஆக்கத்திறனையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் நிகழ்வாக இவ்விழா அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: