News Just In

11/23/2026 09:03:00 PM

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை(23.11.2026) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் வைத்தியசாலை முன்பு அமைதியான முறையில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடமை நேரத்திற்கு மேலதிகமாக பணியாற்றும் தாதிய உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க வேண்டும், முன்மொழியப்பட்ட தாதியர் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை நிதி ஒதுக்கீடுகளைச் செய்தல் வேண்டும், விசேட கொடுப்பனவு 20000 ரூபா அதிகரித்தல் வேண்டும், தாதியர் சேவையில் நிலவும் சம்பள மற்றும் சேவைக் கொடுப்பனவு பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும், ஆபத்துக் கொடுப்பனவை 15 வீதத்தால் வழங்கு, தாதியர் சேவையின் சரக்கு மற்றும் கையிருப்பு முகாமைத்துவ பொறுப்பிற்கான கொடுப்பனவை 5000 ரூபா வழங்க வேண்டும்.

போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

No comments: