News Just In

11/25/2026 03:44:00 PM

ஆரையம்பதி மகா விஷ்ணு ஆலயப் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட சாணக்கியன் பா. உ

ஆரையம்பதி மகா விஷ்ணு ஆலயப் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட சாணக்கியன் பா. உ 




மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மகா விஷ்ணு ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக, எனது 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார் 

இவ்விஜயம் மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச சபையின் உப தவிசாளர் திரு. மு. முத்துக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது, மண்முனைப்பற்று – ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் திரு. கா. செந்தில்குமார், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் திரு. வை. தினேஸ்குமார், பிரதேச சபை உறுப்பினர் திருமதி R. சுஜீத்தா, ஆலய அறங்காவலர் சபையினர், கிராம மக்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆலயங்கள் எமது மக்களின் ஆன்மீக வாழ்விலும், பண்பாட்டு மரபுகளிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. அந்த வகையில், ஆலயங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக அவற்றின் வழிபாட்டுச் செயற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுப்பது அவசியமாகும் 

No comments: