News Just In

11/25/2026 10:39:00 AM

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்



இந்தியப் பெருங்கடலின் மொரீஷியஸ்–ரீயூனியன் பிராந்தியத்தில் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 6.5 மெக்னிடியூட் வலிமையிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில், தெற்கு அட்சரேகை 17.78 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 65.82 பாகையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.


No comments: