நூருல் ஹுதா உமர்
மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலய 2003ஆம் ஆண்டு க.பொ.சா.தர பழைய மாணவர்களின் முயற்சியால் சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பிரதான பெயர்ப்பலகை மற்றும் திருத்தியமைக்கப்பட்ட தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.ஏ. அஸ்தர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிக்கல்வி பணிப்பாளரும், காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது, 2003ஆம் ஆண்டு க.பொ.சா.தரப் பழைய மாணவர்களின் நிதி மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையின் பிரதான பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதுடன், திருத்தியமைக்கப்பட்ட தளபாடங்களும் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் 2003ஆம் ஆண்டு க.பொ.சா.தரப் பழைய மாணவர் குழுவின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தாம் கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சிக்கும், தற்போதைய மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கும் பழைய மாணவர்கள் மேற்கொண்டுள்ள இம்முயற்சி பாடசாலைச் சமூகத்தினரால் பாராட்டப்பட்டது. தாய்ப் பாடசாலையின் வளர்ச்சியில் பழைய மாணவர்களின் பங்களிப்பும் சமூகப் பொறுப்புணர்வும் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது

No comments: