News Just In

11/03/2026 09:43:00 PM

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதன் தலைமையில் புதனன்று (03) புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலை தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, பிரஜா சக்தி வேலைத்திட்டம், பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டம், வீடமைப்புத் திட்டங்கள், கிராமிய வீதிகள் வேலைத்திட்டம், பாலங்கள் அமைத்தல், நில செலன திட்டம், புதிய வீதிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், பிரதம பொறியியலாளர் ரீ. சுமன், திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பதவி நிலை உதவியாளர் உட்பட விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: