78,710 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தற்போது சேவையில் – பதவி உயர்வு மற்றும் சேவை கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து நேரடியாகக் கலந்துரையாட அரசாங்கம் எதிர்பார்ப்பு
கொழும்பு | 03.11.2026
நாடு முழுவதும் சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத சேவைச் சிக்கல்கள் மற்றும் எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் அரச சேவைகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகள், பதவி உயர்வுகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்பைத் திருத்துவது தொடர்பில் இருபது வருடங்களுக்கும் மேலாக நிலவி வரும் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்த சாணக்கியன், இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு அரச சேவைகளை வழங்குவதிலும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் பங்களிப்பும் நீண்டகால சேவையும் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம்.என்-4 சம்பள அளவை எம்.என்-5 வரை உயர்த்தவும், எம்.என்-7 சம்பள அளவின் கீழ் பதவி உயர்வு வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும், கல்வித் தகைமைகள் மற்றும் சேவை அனுபவத்துக்கு ஏற்ப பொருத்தமான சேவை கட்டமைப்பொன்றை உருவாக்கவும் கோரிக்கை விடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அபிவிருத்தி சேவையை முறையாக ஸ்தாபிப்பது மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்பைத் திருத்துவது தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினால் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பொதுச் சேவைகள் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய அவசர முன்னுரிமை விடயமாகக் கருதி, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் அவர் கேள்விகளை முன்வைத்தார்.
தற்போது நாடு முழுவதும் சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் துல்லியமான எண்ணிக்கை என்ன, சேவைப் பிரமாணக் குறிப்பைத் திருத்துவதற்கான தற்போதைய முன்னேற்றம் என்ன, அதன் ஒப்புதல் தாமதமாவதற்கான காரணங்கள் யாவை, திருத்தப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பு எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், எம்.என்-4 சம்பள அளவை எம்.என்-5 வரை உயர்த்துவதற்கும், எம்.என்-7 இன் கீழ் பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்றும், இலங்கை அபிவிருத்தி சேவையை முறையாக ஸ்தாபித்து கல்வித் தகைமைகள் மற்றும் சேவை அனுபவத்துக்கு ஏற்ப பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவதற்கான திட்டம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை நிறைவேற்றப்பட்டவை எவை, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கான காரணங்கள் யாவை என்பதையும் அவர் வினவினார்.
நவம்பர் 09 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி, குறிப்பிட்ட காலவரையறையுடன் கூடிய தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரச சேவையில் முக்கிய பங்காற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய சாணக்கியன், பொதுச் சேவைகள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் அமைச்சரின் உடனடியான பதிலை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
“அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சாகும் வரை அதே பதவியில் இருக்க வேண்டுமா?”
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சாணக்கியன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது முழு சேவைக் காலத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவே இருக்க வேண்டிய நிலைமை நியாயமற்றது எனக் குறிப்பிட்டார்.
முறையான வழிமுறைகளுக்கு அமைவாக அவர்களுக்கு பதவி உயர்வுகளும் சம்பள உயர்வுகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் அதிகளவில் பேசியிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சாகும் வரை பதவி உயர்வு இல்லாமல் அதே பதவியில் இருக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், அவர்களின் சேவை கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக அவர்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் சந்தன அபேரத்னவின் பதில். இதற்குப் பதிலளித்த பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன, நாட்டில் தற்போது 78,710 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதவியில் உள்ளதாகத் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் அவ்வப்போது தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, முதலாம் தரத்திற்குரிய வளங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூன்றாம் தர தடைதாண்டல் பரீட்சைக்குப் பதிலாக 10 நாட்கள் பயிற்சி வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பள அதிகரிப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், எம்.என்-4, எம்.என்-5 மற்றும் எம்.என்-7 ஆகிய சேவைத் தரநிலைகளின் அடிப்படையிலேயே சம்பள அதிகரிப்புகளை வழங்க முடியும் என்றும், அதற்கு அப்பாற்பட்டு சம்பள அதிகரிப்புகளை வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் 2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டங்களின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு அமைவாகவே பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
மேலதிக கேள்வி – சாணக்கியன் இராசமாணிக்கம்
அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து மேலதிக கேள்வியை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில்சார் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒரே பதவியில் நீண்டகாலம் தங்கியிருக்காமல், அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்வதற்கான தெளிவான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எம்.என்-7 தரநிலைக்கு உயர்வு பெறுவதற்கான உரிய பரீட்சையை நடத்துமாறு உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும், தகுந்த சேவைத் தரப்படுத்தல்கள் வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களால் அடுத்த நிலைப் பதவிகளுக்கு முன்னேற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை கட்டமைப்பில் நிலவும் இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக உடனடியாக புதிய நிபுணர் குழுவொன்றை நியமித்து, அதன் ஊடாக முறையான முடிவொன்றை எட்ட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
அமைச்சர் சந்தன அபேரத்னவின் மேலதிக பதில்
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் அதே பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.
தற்போது பல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் ஆசிரியர்களாகச் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் தோற்றி, ஆசிரியர் சேவைக்குள் முழுமையாக உள்வாங்கப்பட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் ஏனைய அரச சேவைப் பரீட்சைகளுக்குத் தோற்றி, முறையான வழிமுறைகள் ஊடாக வெவ்வேறு உயர் பதவி நிலைகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தற்போது முன்வைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சேவை கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாகக் காணப்படுகிறது

No comments: