News Just In

11/13/2026 05:43:00 AM

இளைஞனின் மர்ம மரணம்.. பொலிஸ் அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு

இளைஞனின் மர்ம மரணம்.. பொலிஸ் அதிகாரி மீது கொலைக் குற்றச்சாட்டு


ஹோமாகம தலைமையகக் பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹோமாகம தலைமையகக் பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளர் ரஜித குருசிங்க மீது, கொலைக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக் பொலிஸார் நேற்று  (12) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இளைஞருடன் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாட்சி ஒருவர், இன்று முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, ​​அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த சந்தேகநபரான உதவி ஆய்வாளர் குருசிங்கவை, அந்தச் சாட்சியால் அடையாளம் காண முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: