.jpeg)
தமிழ்நாடு ரோட்டரிக் கழகத்தின் “தன்வந்திரி - வாசி சுவாசி" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக 2,000 தமிழ் புத்தகங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவருமான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழக நிர்வாகிகளின் விசேட கோரிக்கைக்கு இணங்க இப்புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு ரோட்டரிக் கழக நிர்வாகிகளிடமிருந்து முதற்கட்டமாக மிகவும் பெறுமதி வாய்ந்த சுமார் 2000 புத்தகங்கள் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையில் இப்புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு நகர் ரோட்டக் கழகத் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான வைத்தியர் கே.ஈ.கருணாகரன் தலைமையில் வியாழக்கிழமை(05) மட்டக்களப்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது.
புத்தக உதவிகள், பல்வேறு உதவித் திட்டங்கள் தமிழ்நாடு ரோட்டரிக் கழகங்கள் மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்களும் இதன் போது இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் ரோட்டரிக் கழகத்தின் இந்திய பிரதிநிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன
No comments: