
மட்டக்களப்பு, வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்கு உற்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றவாளி ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று உத்தரவிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மாங்கேணி பகுதியில் வைத்து குறித்த சிறுமி பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக வாழைச்சேனை காவல்துறையினர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர் பின்னர், விசாரணைகளின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
No comments: