News Just In

10/17/2026 07:33:00 AM

தூக்குமேடை கண்முன்னே தெரியும் அளவுக்குச் சட்ட சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் ராஜபக்சர்கள்

தூக்குமேடை கண்முன்னே தெரியும் அளவுக்குச் சட்ட சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் ராஜபக்சர்கள்




தூக்குமேடை கண்முன்னே தெரியும் அளவுக்குச் சட்ட நடவடிக்கைகளை ராஜபக்ச மாஃபியா கும்பல் எதிர்நோக்கியிருக்கின்றது என்று இடதுசாரி மையத்தின் அமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(16.10.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ராஜபக்ச வார்டு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரருக்காக போராடுகின்றோம் என்று கிளர்ந்துள்ளவர்கள் உண்மையான பௌத்த பிக்குகள் அல்ல. இவர்கள் பணம் கொடுத்து உருவாக்கப்பட்ட, பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்தும் கடந்த கால பாதுகாப்பு அமைச்சில் இருந்தும் நிதி வழங்கி வளர்க்கப்பட்ட ஒரு குழுவினர்.

இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர் தான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர். அவரை விடுவிப்பதற்காக தற்போது நடத்தப்படும் போராட்டத்தின் பின்னணியில் இந்த ராஜபக்ச மாஃபியா குடும்பத்தினரும் அவர்களின் ஆதரவாளர்களும் தான் இருக்கின்றனர்.

இது பௌத்த பிக்குகளின் பாதயாத்திரை அல்ல என்பது மிகவும் தெளிவானது. தங்களுடைய குழுவையும் சிறையில் இருக்கும் தங்களது தலைவரையும் காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் இறுதிக்கட்ட நாடகமே இது. இதற்குப் பிறகு அவர்களிடம் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை. இது அவர்களுடைய கடைசி முயற்சியாகும்.

தூக்குமேடை கண் முன்னே தெரியும் அளவுக்வுக்குச் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டிருக்கும் இந்த ராஜபக்ச மாஃபியா குடும்பத்தினரும், அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவினரும், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் சிறையில் அடைக்கப்படக் கூடிய நிலை ஏற்படும்.

வெலிக்கடைச் சிறையில் இவர்களுக்கு எனத் தனியாக ராஜபக்ச வார்டு என்ற ஒன்றை அமைக்க வேண்டிய நிலைகூட எற்படலாம். அந்த வார்டுக்குச் செல்ல வேண்டியவர்கள் பலர் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: