நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 3ஆம் திகதி படகுடன் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த படகின் ஓட்டுநரான மீனவருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலும் 3 மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
ஏனைய 8 இந்திய மீனவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
No comments: