மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் இடர் முன்னாயத்த நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து ஆசிரியர்களுக்கான இடர் முன்னாயத்தம் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்டது.
மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். ஸியாத் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில், தற்போதைய எல் நைனோ காலநிலை நிலைமையும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
பாடசாலைகளில் இடர் அபாயங்களைக் குறைத்து, அவசர நிலைமைகளைத் திறம்பட எதிர்கொள்வதற்கான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.
மேலும்;, பாடசாலைகளில் வெள்ளம், சூறாவளி உள்ளிட்ட இடர்களின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், இடர்களின்போது மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள், பாடசாலைமட்ட இடராயத்தத் திட்டங்களை வலுப்படுத்துதல், மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் வழிநடத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 50 பாடசாலைகளைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
.jpeg)
No comments: