மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பன்னெடுங்காலமாக மனிதகுல மேம்பாட்டிற்கும் இந்து சமய, கலாசார வளர்ச்சிக்கும் மகத்தான சேவைகளை ஆற்றி வருவதைப் பாராட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம் அதன் உயரிய “சிவநிதி விருதினை” திங்களன்று (26) வழங்கிக் கௌரவித்துள்ளது.
இவ்விருதினை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சார்பாக அதன் பொதுமுகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உட்பட மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments: