News Just In

10/09/2026 10:48:00 AM

விரட்டியடிக்கப்பட்ட ஷிரந்தி : நிலைகுலைந்து போகும் ராஜபக்சர்களின் அரசியல்


விரட்டியடிக்கப்பட்ட ஷிரந்தி : நிலைகுலைந்து போகும் ராஜபக்சர்களின் அரசியல்



நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் மதிப்பை குறைக்கும் வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்ல என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நேற்று தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மனைவி மட்டுமே என்பதை அவர் வலியுறுத்தி கூறினார்.


மகிந்த ராஜபக்சவை போன்றே அரசியல் பலம் கொண்ட நபராகவே ஷிரந்தி ராஜபக்ச செயற்பட்டு வந்தார். எனினும் இந்த கருத்துக்களால் அவரது மதிப்பு இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இதற்கிடையில், பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட பலரும் தனது கட்சியின் உறுப்பினர்கள் அல்ல என சாகர காரியவசம் முன்னர் தெரிவித்திருந்தார்.
ராஜபக்ச குடும்பம்

இதேபோன்றதொரு நிலையே ஷிரந்தி ராஜபக்சவுக்கும் ஏற்பட்டுள்ளதாக பலரும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக ராஜபக்ச குடும்பம் தற்போது நிலைகுலைந்துள்ள நிலையில், பொதுஜன பெரமுன கட்சியை வழிநடத்த ஆளுமைமிக்க ஒருவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் காரியவசத்தின் முறையற்ற பேச்சுக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக மாறும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments: