உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு அரசு மதிப்பளிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று (.18 .10.2026) பதுளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பேரணியில் உரையாற்றிய அவர், சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும், அவற்றை விசாரிப்பது பொலிஸார் உள்ளிட்ட அமைப்புகளின் பணி என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், சட்டத்தை விளக்கி நடைமுறைப்படுத்தும் இறுதி அதிகாரம் நீதித்துறைக்கே, குறிப்பாக உயர் நீதிமன்றத்திற்கே உரியது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகு சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிமன்ற முடிவுகளுக்கு அரசாங்கம் கட்டுப்பட்டுச் செயல்படும் என்றும், அதற்கு அப்பாற்பட்ட தீர்வுகளை எதிர்பார்ப்பது முறையல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான 6 ஆண்டு சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, பிக்குகள் மற்றும் எதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: