News Just In

10/18/2026 05:15:00 PM

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா கிளையின் 98 ஆண்டுகால சேவை வரலாற்று நூல் வெளியீடும் ஆலிம்கள் கௌரவிப்பு விழாவும்

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யதுல் உலமா கிளையின் 98 ஆண்டுகால சேவை வரலாற்று நூல் வெளியீடும் ஆலிம்கள் கௌரவிப்பு விழாவும்


(நூருல் ஹுதா உமர் )

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் 98 ஆண்டுகால சேவை வரலாற்றை ஆவணப்படுத்தும் வரலாற்று நூல் வெளியீடும், நூற்றாண்டு நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆலிம்கள் கௌரவிப்பு விழாவும் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிவேரியன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கிளையின் கௌரவத் தலைவரும், விழாவின் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.எம். மீராசாஹிப் சலீம் (ஷர்க்கி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அரகம் நூராமித் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் மார்க்கக் கல்வி, சமூக வழிகாட்டல் மற்றும் சமயப் பணிகளில் நீண்டகாலமாகப் பங்களிப்புச் செய்த ஆலிம்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், கிளையின் 98 ஆண்டுகால சேவை வரலாற்றை எடுத்துரைக்கும் வரலாற்று நூல் வெளியிடப்பட்டதுடன், நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் கிளையின் எதிர்காலப் பணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆலிம்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்விமான்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் மார்க்க மற்றும் சமூகப் பணிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கிளையின் வரலாற்றையும், அதன் சேவைகளையும் எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முக்கிய நிகழ்வாக இவ்விழா அமைந்தது.

No comments: