News Just In

10/28/2026 10:41:00 AM

இளைஞர்களின் கருத்துகளைப் பாராளுமன்றக் குழுக்களில் முன்வைக்க நடவடிக்கை– சாணக்கியன் தலைமையில் கலந்துரையாடல்

இளைஞர்களின் கருத்துகளைப் பாராளுமன்றக் குழுக்களில் முன்வைக்க நடவடிக்கை– சாணக்கியன் தலைமையில் கலந்துரையாடல்





இளைஞர்களின் கொள்கை முன்மொழிவுகளைப் பாராளுமன்றச் செயற்பாடுகளில்உள்வாங்குவது தொடர்பில் விசேட கவனம்

இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள், பிரச்சினைகள் மற்றும் கொள்கைமுன்மொழிவுகளைப் பாராளுமன்றக் குழுக்களில் முன்வைப்பதுடன், இந்தச்செயற்பாட்டில் இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதுதொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தின் திறந்த ஆட்சிமுறை முன்முயற்சிக்கான பாராளுமன்றக்
குழுவின் (Parliamentary Caucus for the Open Parliament Initiative)
ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “குரலிலிருந்து கொள்கைக்கு” (Voice to
Policy) பயிற்சிப் பட்டறைகளில் இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகள்
மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றக் குழுக்களிடம் கொண்டு செல்வதுதொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், குறித்த
பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்தஅபேசேன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

திறந்த பாராளுமன்றக் கொள்கையை ஊக்குவிப்பதுடன், பாராளுமன்ற விவகாரங்களில்இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தப் பயிற்சிப் பட்டறைகள்நடத்தப்பட்டன. கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி மாவட்டங்களில்இப்பட்டறைகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது, குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள், பயிற்சிப்பட்டறைகளின்போது இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட பொதுவான பிரச்சினைகள்,கருத்துகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.

இளைஞர்கள் அடையாளம் கண்டுள்ள பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுப்பரிந்துரைகளையும் எதிர்காலப் பாராளுமன்றச் செயற்பாடுகளில் பரிசீலனைக்குஉட்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது விரிவாகக்கலந்துரையாடப்பட்டது.

மேலும், இளைஞர் பிரதிநிதிகள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளுடன் தொடர்புடையபாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் (Sectoral OversightCommittees) நேரடியாக ஈடுபட்டு, தமது கருத்துகள் மற்றும் கொள்கை
முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும்கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பாராளுமன்றச்
செயற்பாடுகளுடன் இணைப்பதன் மூலம், ஜனநாயகச் செயற்பாடுகளில் பொதுமக்களின்பங்கேற்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்றக் குழுவின் உறுப்பினர்களுடன், “Voice to
Policy” பயிற்சிப் பட்டறைத் தொடருக்கு ஆதரவளிக்கும் உள்ளடக்கிய
தாக்கத்திற்கான கூட்டணி (CII – Coalition for Inclusive Impact) மற்றும்
தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI – National Democratic Institute) ஆகிய
அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

No comments: