News Just In

10/01/2026 06:08:00 AM

கோட்டாபயவை கலங்கடித்த காணொளி ஆதாரம்!

கோட்டாபயவை கலங்கடித்த காணொளி ஆதாரம்! மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய வித்தியாதரன்





இலங்கையைச் சேர்ந்த ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் 2009 ஆம் ஆண்டு வெள்ளை வானில் வந்த ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்ட பாணியில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆரம்பத்தில் இது ஒரு அடையாளம் தெரியாத நபர்களின் கடத்தல் என பொலிஸாரால் கூறப்பட்டாலும், சர்வதேச ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முறைப்படி "கைது செய்யப்பட்டுள்ளார்" என அரச தரப்பு ஒப்புக்கொண்டது.

2009 பெப்ரவரி 20 அன்று கொழும்பு மீது விடுதலைப் புலிகள் நடத்திய வான்வழித் தாக்குதல் குறித்து வித்தியாதரனுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்றும், அது தொடர்பாகவே அவர் விசாரிக்கப்படுவதாகவும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் எங்களிடம் உறுதியான தகவல் உள்ளது.அதனையும் மறைத்து வைக்க முயல்வோர் கைது செய்யப்படுவார்கள்.இன்னும் சிலர் வித்தியாதரனைப்போல் கைது செய்யப்படுவர் எனவும் கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஒரு கடத்தல் விவகாரத்தை கைது என்று கூறியிருக்கின்றார்.அப்படியென்றால் இவர் எத்தனை பேரைக் கடத்தி இருப்பார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: