1990ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (30) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில், 'மறுக்கப்பட்ட உரிமைகள், மீள்குடியேற்றம், நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைந்த அழைப்பு' எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.மஹானாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல் அஸீஸின் கிராஅத்துடன் ஆரம்பமானது.
நிகழ்வின் பிரதம பேச்சாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். திருவரங்கன் மற்றும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.எப். சப்னா ஆகியோர் உரையாற்றினர். பொதுமக்கள் சார்பில் வர்த்தகர் பிரதிநிதி முஜாஹித்தும் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, வடக்கு முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பொதுப் பிரகடனத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் செயலாளருமான என்.எம். அப்துல்லாஹ் முன்வைத்தார்.
கலந்துரையாடலில் பங்கேற்றவர்களின் அங்கீகாரத்துடன் ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட இப்பிரகடனத்தில் ஆறு முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.
வடக்கு மாகாணம் முஸ்லிம் மக்களின் பூர்வீகத் தாயகமாகும் என்பதையும், அவர்களின் வாழ்வுரிமை, மத, கலாசார மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரகடனம் வலியுறுத்தியது.
1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பலவந்த வெளியேற்றத்தின் அநீதியை அங்கீகரித்து, அதன் வரலாற்றையும் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களையும் ஆவணப்படுத்துவதுடன், பொறுப்புக்கூறல், உரிய இழப்பீடு மற்றும் பரிகாரங்களை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் தமது பூர்வீக இடங்களுக்குப் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் திரும்பி வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், வீடமைப்பு, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மீள்குடியேற்றத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன, மத மற்றும் அரசியல் பாகுபாடுகளின்றி அனைத்து உரிமைகளும் சேவைகளும் சமமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் அமைதியான சகவாழ்வை வலுப்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு சமூகமும் எதிர்காலத்தில் மீண்டும் பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாகாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36ஆவது ஆண்டு நினைவுநாளுக்கான பொதுப் பிரகடனம்
1990ஆம் ஆண்டு வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை (இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதை) நினைவுகூர்ந்து, உலகெங்கும் சிதறி வாழ்ந்து, இடம்பெயர்வின் வலியையும் அதன் விளைவுகளையும் இன்றும் சுமந்துகொண்டிருக்கும் எமது மக்களின் உரிமைகளையும் எதிர்பார்ப்புகளையும் வலியுறுத்தும் வகையில் இப்பொதுப் பிரகடனத்தை யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபை முன்வைக்கின்றது.
1. தாயகமும் வாழ்வுரிமையும்
வடக்கு மாகாணம் முஸ்லிம் மக்களினதும் தாயகமாகும். அது அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள், மத, கலாசார மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும். அங்கு தமது அடையாளங்களையும் உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும்.
2. அநீதியை அங்கீகரித்தலும் நீதியை உறுதிசெய்தலும்
1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பலவந்த வெளியேற்றத்தின் அநீதியை அங்கீகரிக்கவும், அதன் வரலாற்றையும் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களையும் முறையாக ஆவணப்படுத்திப் பாதுகாக்கவும் அழைப்பு விடுக்கின்றோம். அத்துடன், பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளையும் பரிகாரங்களையும் வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்.
3. பூர்வீக இடங்களுக்குத் திரும்புவதற்கான உரிமை
இடம்பெயர்ந்த மக்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் தமது நிலம், சொத்து, மத மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்பட்ட நிலையில், தமது விருப்பத்தின் அடிப்படையில் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் பூர்வீக இடங்களுக்குத் திரும்பி வாழ்வதற்கான உரிமையை மீண்டும் வலியுறுத்துகின்றோம். இவ்வுரிமையை நடைமுறையில் உறுதிசெய்வது அவர்களுக்கான நீதியின் அடிப்படையாகும்.
4. ஒருங்கிணைந்த மீள்குடியேற்றச் செயல் திட்டம்
பாதிக்கப்பட்ட மக்களின் அர்த்தமுள்ள பங்கேற்புடன், மீள்குடியேற்றம், வீட்டுவசதி, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைச் சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதிசெய்யும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
5. பாகுபாடற்ற உரிமைகளும் சேவைகளும்
தற்போது மீள்குடியேறியுள்ள மக்களினதும் எதிர்காலத்தில் மீள்குடியேற விரும்பும் மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இனம், மதம், அரசியல் சார்பு அல்லது அதிகாரத் தலையீடு காரணமாக எந்தவிதப் பாகுபாடுகளோ தடைகளோ இன்றி, அவர்களுக்கு உரிய உரிமைகள், சலுகைகள், உதவிகள் மற்றும் சேவைகள் சமமாகக் கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
6. நல்லிணக்கமும் மீண்டும் நிகழாமைக்கான உறுதியும்
தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் அமைதியான சகவாழ்வை வலுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயலாற்ற உறுதிபூணுகின்றோம். எந்தவொரு சமூகமும் மீண்டும் பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாகாதவாறு உரிய பாதுகாப்புகளை உறுதிசெய்வது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
வரலாற்று நினைவைப் பாதுகாத்தல், மறுக்கப்பட்ட உரிமைகளை உறுதிசெய்தல், கண்ணியமான மீள்குடியேற்றம், நீதி, உரிய இழப்பீடு, சமத்துவம், சகவாழ்வு, நீடித்த ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையே எமது மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளாகும். இவற்றை நடைமுறையில் நிறைவேற்றுவதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இப்பொதுப் பிரகடனமானது 2026.10.30ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் ஊடகவியலாளர் மாநாட்டில், யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் செயலாளர் என்.எம். அப்துல்லாஹ்வினால் உரையாக முன்வைக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட அனைத்து வடக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் சார்பில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையினால் பிரகடனமாக நிறைவேற்றப்பட்டு ஊடக அறிக்கையாக வெளியிடப்பட்டது.
மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஆர்.எப்.றிஸ்லா, யாழ்ப்பாணம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், வர்த்தகப் பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
No comments: