News Just In

9/13/2026 01:42:00 PM

நண்பா.... ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்! படு வைரலாகும் வீடியோ

நண்பா.... ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்! படு வைரலாகும் வீடியோ



லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை துவக்கி வைக்க சென்றபோது, ஓடிச் சென்று அஜித்தை ஆரத் தழுவிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித் - விஜய் சந்திப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய்.

இருவரும் ஒரே காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்ததுடன், அவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர்கள்.

இவர்களது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே திருவிழா கோலம் பூண்ட காலங்களும் உண்டு.ஆனால், காலம் மாற… இருவரது பயணமும் தற்போது வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கிறது.



நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியல் களத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.

மறுபுறம், அஜித் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், கார் பந்தயம் மீதான தனது ஆர்வத்தை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.

குறிப்பாக சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித்தின் பங்கேற்பும், அவரது ரேசிங் அணியின் செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.




இந்நிலையில், லண்டனில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தத காணொளி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அஜித்தை பார்த்ததும் சிறு குழந்தை போல் விஜய் ஓடிச்சென்று கட்டியணைத்துள்ளார். குறித்த அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.

No comments: