நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்த்துறை இறுதியாண்டு மாணவர் செல்வன் மனாஸ் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வு, அனைவரின் சுய பிரார்த்தனையுடன் ஆரம்பமானது. பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் வரவேற்புரையாற்றினார்.
மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ. எப். எம். அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மூத்த பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் நிகழ்வை ஒருங்கிணைத்து, சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
கலை–கலாசாரத் துறை பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம். எம். பாஸில் வாழ்த்துரை வழங்கியதுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பதிவுசெய்து, நிகழ்வில் கலந்துகொண்ட சமூகத் தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழாவில் இலங்கை முல்லைப் பதிப்பக உரிமையாளர் திரு. முல்லை முஸ்ரிபா, பிரபல எழுத்தாளர் திரு. ஜிஃப்ரி ஹாசன், சட்டத்தரணி திரு. சர்ஜூன் ஜமாலுதீன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். பிரபல விமர்சகர் திரு. உமா வரதராஜன் நூல் தொடர்பான சிறப்பு விமர்சன உரையை நிகழ்த்தினார்.
நூலின் முதல் பிரதியை சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரும் சமூக அடித்தளத் தலைவருமான திரு. அ. முஹம்மது பிலால் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், “இந்த நூல் கடந்த கால் நூற்றாண்டு காலத்தின் மிக முக்கிய வரலாற்று ஆவணம். தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக இது திகழ்கிறது” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, வாசிப்பை நேசிக்கும் இளைய தலைமுறையைப் பாராட்டும் வகையில், அரசியல் அறிவியல் துறை இறுதியாண்டு மாணவர் செல்வன் எம். ஏ. சதக்கத்துல்லா மற்றும் மொழித்துறை இறுதியாண்டு மாணவி குமாரி ஒய். ஷாலினி ஆகியோருக்கு அடுத்தடுத்த நூல் பிரதிகள் வழங்கப்பட்டன.
மேலும், நூலில் இடம்பெற்ற சிறுகதை ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜுனைதீன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நூல் தொகுப்பாசிரியரும் நன்னூல் பதிப்பக உரிமையாளருமான திரு. மணலி அப்துல் காதர் நூல் பிரதிகளை வழங்கினார்.
நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ஏ.எம். ஜுனைதீன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக, நூல் தொகுப்பாசிரியர் திரு. மணலி அப்துல் காதர் ஏற்புரையாற்றி நன்றி தெரிவித்தார்.

No comments: