கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதி, திணைக்களத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர்,தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைகளுக்காகவே இவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. பரீட்சை முறைகேடுகள் காரணமாக தமக்கு ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புக்களுக்காக 05 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி இம்மாணவர், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பில் நுகேகொடை மாவட்ட நீதிபதி ஆர்.ஏ.என். ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர்உள்ளிட்ட எட்டு பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
குறித்த கற்கை நெறியின் சில பாடங்களில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், சில நாட்களின் பின்னர்,சித்தியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.எவ்வித மீள் பரீ்ட்சையும் நடத்தப்படாமல் இது,எவ்வாறு சாத்தியமாகுமென்றும் குறித்த மாணவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.பரீட்சை வினாத்தாள் கசிவு, முறையற்ற புள்ளியிடல் மற்றும் இலஞ்சம் கோரியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை மனுதாரர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9/03/2026 10:08:00 AM
கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments: