மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவளத்துறை திணைக்களத்தின் கீழுள்ள காணிகளைவிடுவிப்பதில் தொடரும் தாமதம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பிய சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி., ஜனாதிபதி வழங்கிய தீர்வுகள்ஐந்து மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அமைச்சர் கூறும்கால அவகாசம் எவ்வாறு தீர்வை உறுதிப்படுத்தும் என
கேள்விக்குட்படுத்தினார்.
ஜனாதிபதியிடம் தெரிவித்தும் நடைமுறைப்படுத்தப்படாத தீர்வுகள்
2026 செப்டெம்பர் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி–பதில்
நிகழ்வின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவளத்துறை திணைக்களத்தின்கீழுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகளை சாணக்கியன்இராசமாணிக்கம் எம்.பி. முன்வைத்தார்.
வனவளத்துறை திணைக்களத்திடம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் இலங்கைத்தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் அவர்கள் பிரதமரிடம்எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு மாத காலத்துக்குள் பதிலளிப்பதாக பிரதமர்உறுதியளித்திருந்த போதிலும், இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என அவர்சுட்டிக்காட்டினார்.
மேலும், காணி விடுவிப்பு விவகாரத்தில் மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாகஅமைச்சர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதிவழங்கிய தீர்வுகளே ஐந்து மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில்,அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் கேள்விகள் எழுவதாகக்குறிப்பிட்டார்.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைச் சுட்டிக்காட்டிய சாணக்கியன் எம்.பி.,மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்குவனவளத்துறை திணைக்களம் தயாராக இல்லை என்பது கலந்துரையாடலின்போது தெளிவாகவெளிப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதனுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவளத்துறை திணைக்களம் செயற்படும்முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வீராணைக்கல் விவசாய நிலம் தொடர்பில் கேள்வி
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வீராணைக்கல் விவசாய நிலம்
தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஏறாவூர்ப்பற்று
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் குறித்த விவசாய நிலம் தொடர்பில் பல
விடயங்களை முன்வைத்துள்ளதாகவும், பண்ணையாளர்களும் தமது நிலைப்பாட்டைத்தெரிவித்துள்ளதாகவும் சாணக்கியன் எம்.பி. கூறினார். எனினும், குறித்தநிலப்பகுதியை வனவளத்துறை திணைக்களத்துக்கு வழங்கும் வகையில் வர்த்தமானிஅறிவித்தல் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சரால்குறிப்பிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதுதொடர்பில், வீராணைக்கல் விவசாய அமைப்புக்குச் சொந்தமான சுமார் 560ஏக்கர் காணியை வன ஒதுக்கமாகப் பிரகடனப்படுத்துவதற்கு வனப் பாதுகாப்புத்திணைக்களம் முன்மொழிந்துள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 1979ஆம்
ஆண்டு முதல் குறித்த காணி பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டு
வருவதுடன், 1983ஆம் ஆண்டு முதல் வருடாந்த காணி அனுமதிப்பத்திரங்கள்
வழங்கப்பட்டுள்ளதா என்றும், அவ்வாறு இருந்தால் 2008/04ஆம் இலக்க
சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக விவசாயிகளுக்கு காணியை மீளவழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
பட்டிப்பளையில் காணி விடுவிப்பு தொடர்பில் கேள்வி
பட்டிப்பளை பிரதேசத்தில் 700 ஹெக்டேயர் காணியை விடுவிக்கவுள்ளதாகக்
குறிப்பிடப்படுவதாகத் தெரிவித்த சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி.,
குறித்த காணிப் பகுதியில் வனவளத்துறை திணைக்களத்துக்குச் சொந்தமான 1,500ஏக்கர் பகுதி சட்டவிரோதமாகப் பெரும்பான்மையினத்தவர்களால்
கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.தற்போது அந்த 1,500 ஏக்கர் காணியை விடுவித்து, சட்டவிரோதமாகக்குடியேறியவர்களுக்கே வழங்குவதற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“இவ்வாறான பின்னணியில், மேய்ச்சல் தரைக்குரிய காணிகளை ஏன் விடுவிக்கமுடியாது?” என அவர் கேள்வி எழுப்பினார்.
கிவுல் ஓயா திட்டத்துக்கு 12,000 ஏக்கர் காணி – மட்டக்களப்பில் மட்டும்
ஏன் மறுப்பு?
வவுனியா மாவட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்காக வனவளத்துறை
திணைக்களத்துக்குச் சொந்தமான 12,000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.
ஏனைய மாவட்டங்களில் மக்களின் பயன்பாட்டுக்கான காணிகளை வனவளத்துறைதிணைக்களம் விடுவிக்கும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம்காணிகளை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவது ஏன் எனவும் அவர்கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும்,குறித்த பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை எனத்தெரிவித்த அவர், அரசாங்கத்தின் மீதமுள்ள மூன்று ஆண்டுகளுக்குள்
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு?
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும்
மேய்ச்சல் நிலப் பிரச்சினைகள் தொடர்பிலும் சாணக்கியன் எம்.பி. கருத்து
வெளியிட்டார். திவுலான பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சல்
நடவடிக்கைகளுக்காகக் கொண்டு செல்லுமாறு அபிவிருத்திக் குழுக்
கூட்டங்களில் அறிவுறுத்தப்படுவதாகவும், ஆனால் அங்கு செல்லும்
பண்ணையாளர்களுக்கு எதிராக வனவளத்துறை திணைக்களத்தால் வழக்குகள் தாக்கல்செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால், அரச அதிகாரிகளின்தீர்மானங்களுக்கும் நடைமுறைச் செயற்பாடுகளுக்கும் இடையில் காணப்படும்முரண்பாடுகள் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பினார்.
சுற்றாடல் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கேள்விகள்
சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. மட்டக்களப்பு மாவட்டத்தில் வனப்
பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழுள்ள காணிகள் தொடர்பில் சுற்றாடல்
அமைச்சரிடம் பின்வரும் தகவல்களைக் கோரினார்:
மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தமானியில் வனங்களாகப்
பிரசுரிக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு, அவை அமைந்துள்ள பிரதேச செயலாளர்பிரிவுகள், கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் கிராமங்கள். வன
ஒதுக்கங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காணிகளின்விபரங்கள். வன ஒதுக்கங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டு,பிரதேச செயலாளர் அலுவலகங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காணிகளின்விபரங்கள். பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு விடுவிப்பதற்குஉத்தேசிக்கப்பட்டுள்ள காணிகள் மற்றும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளகாணிகளின் அளவு மற்றும் அமைவிடங்கள். மேலும், ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள வீராணைக்கல் விவசாய அமைப்புக்குச் சொந்தமான சுமார்560 ஏக்கர் காணி தொடர்பில் வன ஒதுக்கப் பிரகடனம் மற்றும் விவசாயிகளுக்குகாணியை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள்முன்வைக்கப்பட்டன.

No comments: