News Just In

9/23/2026 05:41:00 AM

அனோஜன் விவகாரத்தில் ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

அனோஜன் விவகாரத்தில் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் – பாராளுமன்றத்தில் 22.09.2026 சாணக்கியன் வலியுறுத்தல்.


அனோஜன் சிவராசாவை எவ்வழியிலாவது காப்பாற்ற வேண்டும் – அரசாங்கத்தின்நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய சாணக்கியன்
சிவராசா அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் துரிதமாகச் செயற்படவில்லை எனத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கம், அனோஜனை எவ்வழியிலாவது காப்பாற்ற வேண்டும்என்பதே தமது கட்சியின் உறுதியான நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

2026 செப்டெம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெற்றோலிய
வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில்
உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து
உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், அனோஜன் விவகாரம் தொடர்பில்அரசாங்கம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் தாம் முழுமையானஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்தார்.

22/7 கீழ் முன்வைத்த கேள்விகள் நிராகரிப்பு அனோஜன் சிவராசா விவகாரம்
தொடர்பில் 22/7 கீழ் கேள்விகளை முன்வைத்திருந்ததாகவும், இந்த விடயம்
தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பதிலளித்துள்ளதால் தாம் முன்வைத்த
கேள்விகள் நிராகரிக்கப்பட்டதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற
உறுப்பினர்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை சவூதி அரேபியாவுக்குஅனுப்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அந்தக்குழுவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரனையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கோரிக்கை விடுத்தார்.
மேன்முறையீடு தொடர்பில் கேள்வி சிவராசா அனோஜன் மேன்முறையீடு செய்த திகதிதொடர்பிலும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் சவூதி அரேபிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும்
மேன்முறையீடு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருந்த
போதிலும், இலங்கை அரசாங்கம் தூதரகம் ஊடாக கடந்த 15, 16 மற்றும் 17ஆம்
திகதிகளிலேயே மேன்முறையீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேன்முறையீட்டுக்காக 18 இலட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தத்தொகையை மீள வழங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும் சாணக்கியன்கூறினார். "அந்தத் தொகையை ஆரம்பத்திலேயே பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கவேண்டும். இதில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது. இவ்வாறான நிலைமை இனி
எவருக்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே இந்தக் கேள்விகளை முன்வைக்கிறோம்."

சட்ட உதவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்படாமை
கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி மேன்முறையீட்டுக்கான கட்டணம்
செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் மரண தண்டனைத் தீர்ப்பு கிடைக்கும்
வரையில் அனோஜனின் குடும்பத்தினருக்கு மேன்முறையீடு, வழக்கு விசாரணைகள்மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பில் உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை எனவும்சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி யார் என்பது கூட அனோஜனின்
குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,
மேன்முறையீடு செய்த சட்டத்தரணி வழக்கு விசாரணையின்போது முன்னிலையாகவில்லைஎனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும்,இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை பரிசீலனைசெய்வதற்குக்கூட சவூதி நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை எனவும் அவர்குறிப்பிட்டார். மேன்முறையீட்டுக்கான கட்டணம் பெறப்பட்ட நிலையில், ஏன்செப்டெம்பர் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யப்படவில்லை என்றும் அவர்கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி மற்றும் சர்வதேச தலையீட்டுக்கான முயற்சிகள்
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட
எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த சாணக்கியன், இந்திய அரசியல் தலையீட்டைக்கோருவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், ஏனைய வெளிநாட்டு இராஜதந்திர உதவிகளையும் புலம்பெயர்
அமைப்புகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகஅவர் தெரிவித்தார். "சிவராசா அனோஜனை எவ்வழியிலாவது காப்பாற்ற வேண்டும்என்பதே எமது நிலைப்பாடு. அவருக்கு பாதகமாக நாங்கள் எதனையும் செய்யவில்லை.
இந்த விடயத்தில் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டவில்லை. அனோஜனுக்கு இன்று
ஏற்பட்டுள்ள நிலைமை இனி எவருக்கும் ஏற்படக்கூடாது என்றே
வலியுறுத்துகிறோம்."

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எச்சரிக்கை
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய
தீர்மானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டசாணக்கியன், அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருப்பதால் சட்டமூலம்நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
எனினும், 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது முடிவல்ல, ஆரம்பம் என்பதைஅரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கடந்த காலஅரசாங்கங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளை ஆராய்ந்து செயற்பட வேண்டும் என்றும்அவர் குறிப்பிட்டார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத் தீர்மானத்தை
வரவேற்பு ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம்
வழங்கியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக சாணக்கியன் இராசமாணிக்கம்
தெரிவித்தார். 

சட்டமூலத்தின் பல ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனநீதிமன்றம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சட்டமூலத்தின் 17ஆவதுவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த மக்கள்வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளமைவரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுக்கமையவிளக்கமறியலில் வைப்பதற்கான சமர்ப்பணங்களை முன்வைக்க முடியும் என
சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
வழங்கவில்லை என்றும், அதற்காக மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல
அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்தை மதிப்பதாகத் தெரிவித்த சாணக்கியன்,
நிறைவேற்றப்படும் சட்டங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை ஆராய்ந்துசெயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

No comments: